
புதிய நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு விடுத்த அழைப்பை, அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கரு ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்று இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுக்களை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, குறித்த நாடாளுமன்ற குழுவை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




