
கொழும்பு, ஜுன் 06
எதிர்காலத்தில் சீமெந்து பொதி ஒன்றின் விலை 4 ஆயிரம் ரூபாவை விட அதிகரிக்குமென இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு காரணமாக சீமெந்து பொதியின் விலை இவ்வாறு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தற்போது சீமெந்து பொதி ஒன்றின் விலை 3 ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.




