
அரசமைப்பின் 21ஆம் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பில் இணையவழிக் கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 6 கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடி ஆராயவுள்ளனர்.
இதற்கு முன்னர் இரு தடவைகள் இது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தின் பின்னர் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கட்சிகள் இது தொடர்பில் ஆராயவுள்ளன.




