நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற தீவுகளில் இந்தியாவால் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக, மண்ணெண்ணெயை கவர்ச்சிப்பொருளாக வழங்கி இத்தீவுகளை தங்கள் வசமாக்குவதற்கு இந்தியா நடவடிக்கையினை மேற்கொள்கிறது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனி வரும் காலங்களில் விவசாயிகள், கடற்தொழிலார்கள், தலைமைத்துவ பெண்கள் மற்றும் அனைத்து தொழிலாளிகளும் இணைத்து பயணிப்பதற்காகவும், சமாதானம் சகவாழ்வு மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான பயணமாக அமைவதற்காவும் இந்த அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம்.
இன்று எமது நாடு பொருளாதார பிரச்சனையால் அதலபாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் கையேந்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவால் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட கச்சதீவினை, தமிழக முதல்வர் மீளப்பெற கேட்டிருக்கின்றமை எமக்கு பெரும் ஏமாற்றத்தினையும் அதிருப்தியையும் தந்துள்ளது.

எனவே இலங்கை – இந்தியாவிற்கு இடையே இருக்க கூடிய இழுவை மடி பிரச்சனைக்கு தீர்வினை வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டார்லினிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற தீவுகளில் இந்தியாவால் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக, மண்ணெண்ணெயை கவர்ச்சிப்பொருளாக வழங்கி இத்தீவுகளை தங்கள் வசமாக்குவதற்கு இந்தியா நடவடிக்கையினை மேற்கொள்கிறது. இவ்வாறாக சென்றால் இந்தியாவிடமே 4 கடல் பரப்புக்களும் சென்று விடும்.
ஆகையால் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து இதற்காக போராடி இதில் வெற்றி காணவேண்டும்.
மேலும் இந்த அமைப்பானது நாம் எல்லா சமூகங்களுக்குள்ளும் நுழைந்து அதன் பிரச்சனைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம், தனித்து நிற்காமல் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என எல்லோரையும் இணைத்து தெளிவாக சிந்தித்து இந்த அமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம்.
இந்த அமைப்பினை சோர விடாமல், இதற்குரிய பங்களிப்பினையும், மூலதனத்தினையும் எந்த வகையிலும் பெற்று வீரியமான மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தருகின்ற அமைப்பாக கொண்டு செல்ல முயற்சிப்போம்.- என்றார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




