பொருளாதார நெருக்கடி நிலையால் சிக்கித் தவிக்கும் மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு சில மாதங்களாக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த ஏப்ரல்9ம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்ததுடன் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி கோட்டா கோ கம என்றவாறு பெயரிடப்பட்டு அங்கிருந்து தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பகுதியாக அமைந்து வருகின்றது.
குறிப்பாக நூலகம், வைத்தியசாலை, சட்ட உதவி மையம், ஊடக மையம் மின்னுற்பத்தி நிலையம் ,நடமாடும் மின் நிலையம் ,குளியல் அறை வசதி, சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கி இருந்தது.
இந்நிலையில் தற்போது கோட்டா கம ஆர்ப்பாட்ட வானொலி நிலையம் உத்தியோகபூர்வமாக ஆர்ப்பாட்ட காரர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வானொலி கலையகத்தின் ஊடாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்டம் தொடர்பிலான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.



பிற செய்திகள்