
கொழும்பு, ஜுன் 07
அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் மேலும் கலந்துரையாடி, சகல தரப்புகளினதும் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போது திருத்தியமைக்கப்பட்ட 21ஆவது திருத் தச்சட்டமூலம் நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டது. எனினும் அதனையொட்டி அமைச்சரவைக்குள் கருத்து வேறுபாடுகளும், முரண்பாடு களும் நீடித்தன எனத் தெரிகின்றது.
பிரதமரை, ஜனாதிபதி பதவி நீக்கும் விவகாரத்தில் சர்ச்சை நீடிக்கின்றது. அத் துடன், அமைச்சுகளுக்கான நியமனம், பதவி நீக்கம், ஒதுக்கீடுகள் விவகாரத்திலும் இறுதி இணக்கப்பாடு இல்லை.
இவை தொடர்பில் கலந்துரையாடி, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் 21 இற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர் மானிப்பது என நேற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.