
கொழும்பு, ஜூன் 7: இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 3 இருபதுக்கு 20, 5 சர்வதேச ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளது.