கொழும்பில் இன்று விசேட எரிவாயு விநியோகம்!

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு இன்று விசேட உள்நாட்டு எரிவாயு விநியோகத் திட்டத்தை LITRO Gas Lanka Ltd அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படும். பிற்பகலில் காஸ் சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 159 டீலர்களுக்கு 16,987 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். 12.5 கிலோ எடையுள்ள 14,977 எரிவாயு சிலிண்டர்கள், 5 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் மற்றும் 2.3 கிலோ எடையுள்ள 1005 சிலிண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.

பிற செய்திகள்

கோட்டா கோ கம வானொலி நிலையம் திறப்பு!(படங்கள் இணைப்பு)

பசுமை இயக்கத்தின் சூழல் தின உரையரங்கு!(படங்கள் இணைப்பு)

மாத்தறை ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு 3 1/2 வருட சிறைத்தண்டனை!

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *