
போக்குவரத்துக்கு டீசல்தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக எரிபொருள்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று எரிபொருள் விநியோகம் தொடர்பிலான உரையின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலையில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்காக 557 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.