
இந்திய வம்சாவழி என்பதனால் காணி அற்றவர்களாக வாழுகின்றோம் என தென்னிலங்கை மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகமாக பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களிடம் சமூகம் மீடியா கருத்துக்களை கேட்டறிந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன்போது மாத்தறையில் வசிக்கும் அன்டன் வனத்தையா கருத்து தெரிவிக்கையில்,
இங்கு கல்வி,கலாச்சாரம் ,காணி உரிமை மற்றும் அரசியல்.
இதிலும் முக்கியமாக கல்வி காணப்படுகின்றது .
தமிழ் மக்கள் சிங்கள பாடசாலைகளில் படிக்கின்றனர் .இதன் போது கலாச்சாரமும் மாறுபடுகின்றது .
5 பாடசாலைகள் இருந்தாலும் ஆசிரியர் பற்றாக்குறை ,மேட்படிப்பை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது . இதனால் தமிழ் பிள்ளைகள் சிங்கள பாடசாலைகளில் படிக்கின்றனர் .
தமிழர்களின் வளர்ச்சி கல்வியிலே தங்கி உள்ளது .அதனை பின் அடைவிற்கு தள்ளுகின்றனர் .
இந்திய வம்சாவழி என்றதனால் இன்னும் காணி அற்றவர்களாக வாழுகின்றோம் .
நாங்கள் அரசியலில் உள்வாங்க படாததினால்தான் பின் தங்கி நிற்கின்றோம் .
அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை வைத்திருக்கின்றோம் இது வரை ஒன்றும் நடைபெறவில்லை .
பொருளாதார ரீதியாக நாங்கள் பெரும் துன்பத்தை எதிர் கொள்ளவோம் .ஒரு வேலை உணவே பெரும் சிரமமகா அமையும் எங்களுக்கு .இதற்கு இடம் பற்றாக்குறையே காரணம் என தெரிவித்தார்
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்