அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் பெட்ரோல் விலையேற்றம் தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நேற்று யாழ். மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்