நாட்டை உயர்த்தும் திட்டம் பிரதமரிடம் இல்லை! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாட்டை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் பிரதமரிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் 2048ஆம் ஆண்டுதான் இயல்பு நிலை திரும்பும் என கூறியதாகவும்,

அவர் வெறுமனே தனது குறைகளை தெரிவித்ததாகவும், தீர்வுகளை வழங்கத் தவறியதாகவும்
அவர் தெரிவித்தார்.

நாளாந்தம் 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணம் தற்போது 220 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தோல்வியுற்ற தலைவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு பணம் அனுப்பமாட்டோம் என வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களும் இலங்கையர்களும் கூறியதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியுற்ற ஜனாதிபதியாக இருந்து விலகப் போவதில்லை என்றும் தனது ஐந்து வருட பதவியை நிறைவு செய்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கூறியது பொதுமக்களிடையே மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் வெளிநாட்டுப் பணம் எவ்வாறு செலுத்தப்படும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அந்நிய செலாவணி முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *