இந்நாட்டில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதன் பின்னர்தான் நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
செப்டெம்பர் இறுதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்ட நாடாக இலங்கை மாறிவிடும்.
அதன்பின்னரே நாடு முழுமையாக திறக்கப்படும் என்றார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.