நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் டெல்டா வைரஸ் திரிபுடைய தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் மாதங்களில் டெல்டா திரிபு இலங்கையில் அதிகரிக்கும் அபாயமுள்ளது.
அத்துடன் டெல்டா வைரஸ் முதன்மையான தொற்றாக மாறும் சாத்தியகூறுகளும் அதிகமுள்ளது.
எனவே, தற்போதைய நிலையில் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.