நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும் போது, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிய நாடாக, இலங்கை விளங்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அதன்பின்னர், நாட்டை முழுமையாக திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிடுகின்றார்
Advertisement