மாற்றுத்திறனாளி ஆசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்

கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதான மாணவியொருவரை தலங்கம, கிம்புலாவல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் வசித்து வரும் மாணவியின் மாமி, சில புத்தகங்களைப் பெற விரும்புவதாக மாணவியிடம் கூறியுள்ளார்.

அந்தப் புத்தகங்களை கொள்ளுப்பிட்டி பகுதியில் இருந்து வாங்க உதவுவதாகக் கூறிய சந்தேகநபரான ஆசிரியர், மாணவியை ஏமாற்றி தனது காரில் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஒன்லைன் வகுப்புகளை முடித்த பின்னர், ஆசிரியருடன் புத்தகங்களை வாங்கப் போவதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார்.

கம்பஹாவிலிருந்து மாணவியை காரின் முன் இருக்கையில் அழைத்துச் சென்று காரை கிம்புலாவல வாகன நிறுத்துமிடத்தில் ஆசிரியர் நிறுத்தியுள்ளார்.

பின்னர், காரின் பின்பக்க ஆசனத்துக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *