
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கை லெபானாக மாறும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வுகூறியிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கோட்டாபயவின் வரி ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், கிரிஸ் நாடு எதிர்கொண்ட திவால் நிலைக்கு செல்லும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர், நாட்டின் தலைமையில் இருந்து விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றபோதும், அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கிறார்.
நாட்டின் இன்றைய நிலைமைக்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சர்கள் விலகியபோது, அந்த அரசாங்கத்துக்கு பொறுப்பான தலைவரும் விலகவேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தினார்.
எனினும் அதனை செய்யாத ஜனாதிபதி, இடைக்கால நிவாரணத்தை பெறுவதற்காக, ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிரதமராக நியமித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார் .
21வது அரசியலமைப்பு திருத்தத்தை முன்கொண்டு செல்லமுடியாத நிலையில் அமைச்சரவையும் தோல்வி கண்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்தின் பல குழுக்கள் பிரிந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் வெவ்வேறு குழுக்களாக உறுப்பினர்கள் செயற்படும் நிலையில், தன்னத்தானே அவர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு கலாசாரமாக மாறியுள்ளதாவும் அவர் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது ஆளுந்தரப்போ அல்லது எதிர் தரப்போ இல்லை, தற்போது நாடாளுமன்றம் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இது ஒரு கலாசாரமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புப் படி நாடாளுமன்றம் ஆளும் மற்றும் எதிர் தரப்பைக் கொண்டிருக்க வேண்டுமே தவிர சுயாதீன உறுப்பினர்கள் கொண்டது அல்ல எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக இருந்தால் நாடாளுமன்ற கட்டமைப்பு தோல்வியடைந்த ஒன்றாகிவிடும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்