
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் துப்புரவுப்பணிகள் முன்னெடுத்த நிலையில் அங்கு சந்தேகத்துக்கிடமான பொருளொன்றை துப்புரவாளர்கள் அவதானித்தனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சந்தேகத்துக்கிடமான பொருளை அவதானித்து கைக்குண்டு என அடையாளம் கண்டனர்.
அதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் கைக்குண்டை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.