
நாட்டின் பல பகுதிகளில் நகைகளைக் கொள்ளையடித்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாயாருக்கு 48 வயது மற்றும் இரண்டு மகள்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள்.
குறித்த தாய் தீவுப் பகுதியில், பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் பல்வேறு பெயர்களில் தோன்றியவர் எனவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு உதவிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.