யாழ்ப்பாணம்,ஜுன் 09
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் சிரமதானப் பணியும் மரநடுகை நிகழ்வும் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் அமைச்சின் உத்தியோகத்தர்கள் சிரமதானப் பணியினை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர், யாழ் மாநகர முதல்வர், யாழ் மாநகர ஆணையாளர், மாநகர சுகாதாரக் குழு தலைவர் மற்றும் யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் விவசாய அமைச்சு உத்தியோக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
சர்வதேச சூழல் தினம் யூன் 5 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டுவருகின்ற நிலையில் அதனை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அமைச்சினால் மே 30 தொடக்கம் யூன் 5 வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விவசாய அமைச்சினால் பல்வேறு சுற்றாடல் சார் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



