
கொழும்பு,ஜுன் 09
கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அவர் இவ்வாறு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணடைந்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று(09) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹரகமையில் அமைந்துள்ள கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.