யாழ்ப்பாணம்,ஜுன் 09
யாழ்ப்பாணம், அரியாலையில் புகையிரத விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று(9) மாலை இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்பட்ட இரவு புகையிரதம், அரியாலை, மாம்பழம் சந்தியில் கார் ஒன்றுடன் விபத்திற்குள்ளானது.
காரில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


