மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 100 பயனாளிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என்.ஜயவிக்கிரம கலந்து கொண்டு காணி அனுமதிப் பத்திரங்களை பயனாளிகளுக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மூதூர் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





பிற செய்திகள்
மின்சக்தி தொடர்பான திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – வெளியானது அறிவிப்பு
வெளிநாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி திடீர் சந்திப்பு!
மின்சக்தி திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றம்; நன்றி தெரிவித்த ரணில்!