
நாட்டில் இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் இரண்டாயிரத்து 416 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களுள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 728 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 354 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 233 பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.
அத்துடன், மே மாத்தில் 6 ஆயிரத்து 483 பேர் டெங்கு நோயினால் பாதிக்கபட்டுள்ளனர்.
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் 26 ஆயிரத்து 622 பேர் டெங்கு நோயினால் பாதிக்கபட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 5 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட 8 பேர் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்