யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் LGBTIQA + சமூகத்தினரின் வானவில் நடைப்பயணத்தில் கலந்துகொண்டர்களில் சிலர் குறித்த சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட்டு, அனைத்து மனிதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் எமது சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
மனிதர்கள் அனைவரும் சமத்துவம் மிக்க உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவானவர்களே. எந்த விதமான பாரபட்சமின்றி அனைவரும் அனைத்து விதமான மனித உரிமைகளும் சுதந்திரமாக அனுபவிப்பதற்கு ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
இதுவே சமூக ,கலாசார ,பண்பாட்டு ,சமய ,இனம் என பல்வேறு வரையறைகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடனான நடைப்பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்
LGBTIQA + சமூகத்தினரை சமூகத்தில் இழிவாக பார்க்கின்ற தன்மை , அவர்களின் சுயமரியாதை மறுக்கப்படல் ,பொது இடங்களில் துஸ்பிரயோகங்களில் உட்படுத்துதல் போன்றன இடம்பெறுகின்றன.
இது தவிர ,தமிழ் பேசும் சமூகத்தில் ,வீட்டு வசதி,மருத்துவ செலவுகள் ,சொந்த குடும்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், வேலை இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,பகிடிவதைகள் போன்றவற்றால் இவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதுடன் தங்கள் பிரதேசங்களில் இருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம்பெயர்தல் போன்றன இடம்பெறுகின்றன.
இவர்களை உறவுமுறைகளில் வைத்து சேர்ந்து வாழுகின்ற தன்மை இன்னும் உருவாகவில்லை.
எனவே எல்லா மனிதர்களையும் மதிக்க வேண்டும் ,நேர் சிந்தனையுடன் செயற்பட வேண்டும் ,மனிதர்களுடைய சம உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதற்கான தீர்வினை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என்றனர் .


பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!