அம்பாறை மாவட்டத்தில் ஆற்று மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதியிலேயே இவ்வாறு மீன்பிடி பெருமளவில் குறைவடைந்துள்ளது.
கடும் வரட்சியும் , எரிபொருட்களின் விலையுமே மீன்களின் விலை அதிகரிக்க காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் .
மேலும், இறால் ஒரு கிலோ 1600 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1800 ஆகவும் செப்பலி (கோல்டன்) ஒரு கிலோ 900 ரூபாவாகவும் மீசை பனையான் ஒரு கிலோ 600 ரூபாவாகவும் மணலை மீன் 1400 ரூபாவாகவும் ஏனைய சில்லறை மீன் வகைகளின் விலைகளும், அதிகரித்துள்ளது .
இப்பகுதியில் கருவாடுகளுக்கு கேள்வியும் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!