அம்பாறை – நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.
கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் 75 இற்கும் மேற்பட்ட காணிகள் மற்றும் தென்னந் தோட்டங்களும் கடலரிப்பால் அழிந்துள்ளன.
இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றதினால், நிர்மாணிக்கபட்டிருந்த கட்டடதின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளது.
மேலும் கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால், 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் கடந்த காலங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் நடைமுறைப்படுத்தபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால், கரையோரம் பேணல் திணைக்களத்தினால் , இப்பகுதியில் (Geo bag) மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிட்டிருந்ததுடன் ,ஜியோ பேக் (GeoBag) பைகளில் மண் இட்டு நிரப்பி கடல் அரிப்பை தடுக்கும் முறை தொடர்பில் , கரையோரம் பேணல் திணைக்களத்தினால் பல மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!