மஹிந்த விரைவில் ராஜினாமா! எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இரகசியமாக காய்நகர்த்தும் நாமல்?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மிக விரைவில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவும் கடந்த சில மாதங்களாக அரசியல் செயற்பாடுகளில் அதிருப்தியுற்று ஒதுங்கியே இருக்கும் நிலையில், மிக விரைவில் மகிந்தவும் அரசியலை விட்டு ஒதுங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே ​நேரம் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ராஜாங்க அமைச்சர்களின் நியமனத்தின் பின்னர் பொதுஜன பெரமுண கட்சியில் எஞ்சியுள்ளவர்களைக் கூட்டிணைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ திட்டமிட்டு வருவதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதற்காக பசில், நாமல், மஹிந்த முக்கூட்டு அணி தற்போதைக்கு கணிசமான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துவிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு கணிசமானவர்கள் அரசாங்கத்துடன் இணையும் போது சஜித்தின் ஆட்பலம் குறைந்த பின், நாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாகும் என மேலும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி

ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *