மன்­னா­ரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப்படுகொலை

மன்­னார் – நொச்­சிக்­கு­ளம் பகு­தி­யில் வாள்­வெட்­டுத் தாக்­கு­த­லில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள் இரு­வர் வெட்­டிப் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளனர். மாட்­டு­வண்­டிச் சவா­ரி­யில் ஏற்­பட்ட மோதலே இந்­தப் படு­கொ­லைக்­குக் கார­ணம் என்று பொலி­ஸா­ரின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வம் தொடர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

மன்­னார் – உயி­லங்­கு­ளம் பகு­தி­யில் கடந்த வாரம் மாட்­டு­வண்­டிச் சவா­ரி­யொன்று நடை­பெற்­றுள்­ளது. வெட்­டிக் கொலை­செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர் ஒரு­வர் நொச்­சிக்­கு­ளத்­தில் வசித்து வரு­கி­றார். அவ­ரு­ட­னும் மாட்டு வண்­டிச் சவா­ரி­யின்­போது நொச்­சிக்­கு­ளத்­தைச் சேர்ந்த சிலர் தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­னர் என்று
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை குறித்த நபர் நொச்­சிக்­கு­ளத்­தில் உள்ள தனது வீட்­டில் இருந்து மாடு கட்­டச் சென்­றுள்­ளார்.

இதன்­போது மாட்­டு­வண்­டிச் சவா­ரி­யின்­போது தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் குறித்த நபர் மீது வாள் வெட்­டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­ன­ரெ­னத்
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தாக்­கு­த­லில் காய­ம­டைந்த அவர், பிர­தான வீதிக்கு ஓடி­வந்­துள்­ளார். வீதி­யில் நின்­ற­வர்­கள் அவரை மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு
அனுப்­பி­வைத்­துள்­ள­னர்.

இந்த நிலை­யில் குறித்த தமது உற­வி­னர் தாக்­கப்­பட்­டமை குறித்து நியா­யம் கேட்­ப­தற்­காக, உயி­லங்­கு­ளத்­தைச் சேர்ந்த சகோ­த­ரர்­க­ளான யேசு­தா­சன் றோமியோ (வயது -40) மற்­றும் யேசு­தா­சன் தேவ­தாஸ் (வயது-33) ஆகிய இரு­வ­ரும் மோட்­டார் சைக்­கி­ளில் நொச்­சிக்­கு­ளம் கிரா­மத்­துக்­குச் சென்­றுள்­ள­னர். இதன்­போது குறித்த இரு­வ­ரை­யும் வீதி­யில் இடை­ம­றித்து அவர்­கள் மீதும் கடும் வாள்­வெட்­டுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அவர்­கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் மன்­னா­ரில் பேர­திர்ச்­சியை உண்­டு­பண்­ணி­யுள்­ள­து­டன் இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *