
கொழும்பு, ஜூன் 11
மேலும் 11 அத்தியாவசிய உணவுப்
பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை
அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம்
கவனம் செலுத்தியுள்ளது.
சீனி, பருப்பு, மாவு, வெங்காயம்,
உருளைக்கிழங்கு, ரின் மீன், பால் காய்ந்த
மிளகாய் உட்பட மேலும் பலவற்றுக்கான
கட்டுப்பாட்டு விலையை முதலில்
நிர்ணயிப்பதில் முக்கிய கவனம்
செலுத்தப்படுகிறது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக்
கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்தத்
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.