Free Fire ஆன்லைன் விளையாட்டால் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !

Free Fire ஆன்லைன் விளையாட்டால் 21 வயது இ ளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் தமிழ்நாடு கரூர், சிவசக்தி நகரில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த (21) வயதுடைய சஞ்சய் என பொலிஸாரின் விசாரனையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் Free fire விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

12ம் வகுப்பு படிக்கும் போது விளையாடத் தொடங்கியவர் கல்லூரிக்கு சென்று வந்த பிறகும், அவர் இந்த ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.

இதனையடுத்து சஞ்சயின் நண்பர்கள் போன் செய்வதாக கூறி, சஞ்சயிடமிருந்து செல்போனை வாங்கி Free Fireயின் User ID மற்றும் Password திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியிருக்கிறார்கள்.

06 மாதத்திற்கு பிறகும், மீண்டும் நண்பர்கள் சஞ்சயிடம் இதேபோல் செல்போனை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.

இதனால்,மன உ ளைச்சலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *