
முழங்காவில், ஜூன் 11
முழங்காவில் பகுதியில் இன்று மதியம் ஒரு வயது குழந்தை கதிரையில் இருந்து இறங்கிய சமயம் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
முழங்காவில் வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ராகவன் என்பவரது ஒரு வயது ஆண் குழந்தையை தாயார் கதிரையில் இருத்திவிட்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது கதிரையில் இருந்த குழந்தை கீழே இறங்க முற்பட்ட சமயம் தலையின் பின்பகுதி அடிபட வீழ்ந்துள்ளது.
உடனடியாக குழந்தையை முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்பே குழந்தை இறந்தமையினை வைத்தியர் உறுதி செய்துள்ளார்.
குழந்தையின் உடலம் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.