சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை, மீட்சியடைந்தாலும் நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரம் மற்றும் பெருமளவிலான வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒரு முக்கியமான துறையாக இருப்பதால், அதை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என கூறினார்.
அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கொண்டிருக்கும் நாட்டைப் பற்றிய தவறான தகவல்களை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
முகக்கவசம் அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம்! மக்களுக்கு அறிவுறுத்தல்