
கொழும்பு,ஜுன் 11
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும் என இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் பணம் செலுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை காரணமாகவே இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.