தனது வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச அமைப்பு ஒன்றில் இணையும் சுவிட்சர்லாந்து

தனது வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய உள்ளது.

2022 ஜூன் 9ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 முதல் 2024 வரை சுவிட்சர்லாந்து அந்த அமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும்.

இது தொடர்பான வாக்கெடுப்பில், 187 நாடுகள் சுவிட்சர்லாந்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினராகி 20 ஆண்டுகளுக்குப் பின் அது பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, Swiss People’s Party (UDC/SVP) என்னும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் சுவிட்சர்லாந்தின் இந்த முடிவுக்கு ஆதரவாக உள்ளன.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் இணைந்துள்ளதால், நடுநிலைமை கொண்ட நாடு என பெயர் பெற்ற சுவிட்சர்லாந்து, தேவையில்லாமல் வெளிநாடுகளின் பிரச்சினைகளுக்குள் இழுக்கப்படும் என UDC/SVP கட்சி கருதுவதால், சுவிட்சர்லாந்தின் முடிவுக்கு எதிராக அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *