அச்செழுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த திருடர் கூட்டம் இரு ஆட்டுக் கடாவை களவாடிச் சென்றுள்ளனர்.
அச்செழு அம்மன் கோவில் பகுதியில் உள்ள சீ.சீ.ரிவி கமரா பொருத்தப்பட்ட வீட்டிற்குள் முகங்களை சாக்குகளால் மூடியவாறு உள்நுழைந்து கமரா இணைப்புகளை அறுத்த பின்பு இந்த களவில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு களவாடப்பட்ட இரு ஆடுகளும் தற்போதைய சந்தை விலையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியென உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தக் களவு தொடர்பில் அச்சுவேலிப் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்