இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் தொடர்பாக எந்தக் கேள்விக்கும் இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
விவசாய சமூகத்துக்கு இலங்கை இராணுவம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும். உணவு நெருக்கடிக்கு எதிரான தனது போரின் முதல் படியாக அரசாங்கத்தால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் இராணுவம் விசாரணை நடத்தியுள்ளது . விவசாய சபையின் அறிவுறுத்தலின்படி, இந்த வெற்று நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும்.
அரசியல் வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்படும் போது இராணுவத்தினரும் இருந்தனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை . அச்சுறுத்தலை தடுக்க கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் – என்றார்.
பிற செய்திகள்