நாட்டிற்கு இழைத்த குற்றத்திற்காக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சிறையில் அடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்தார்.
இன்று (12) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
குடும்ப அரசியலை முன்னின்று வழிநடத்தியவர் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இவ்வாறான விடயங்களை செய்த ஒருவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடியுமா என கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு சிரித்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இன்று நாட்டில் அவரைப் பற்றி யாரும் கதைப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.