முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி தற்கொலை?

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி (27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் .

குறித்த தம்பதிகள் நேற்று மாலை 7 மணியளவில் இருவரும் கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் அவர்கள் தாமே கிணற்றிற்குள் பாய்ந்தார்களா அல்லது ஏதேனும் குற்றச்செயல்களா என்பது இதுவரை உறுதியாகவில்லை என கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

மேலும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *