
“தோல்வியுற்ற ஆட்சியாளர்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விமர்சித்த வியத்மக அமைப்பின் ஸ்தாபகரான நாலக கொடஹேவா, தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் சரத் பொன்சேகா, திஸ்ஸ அத்தநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக பத்திரன, முஜிபுர் ரகுமான், ஹர்ஷன ராஜகருணா உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்