நாட்டில் இடம்பெற்ற யுத்த காலம் முதல் தற்போது வரை வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகள் இன்னமும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காணப்படுகின்றன.
இதில் ஒரு பகுதியாக முகாமாலை பிரதேசத்தின் அநேகமான பகுதிகள் இன்னமும் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது.
அதிலும் குறிப்பாக மக்களின் வீடுகள் படங்கு ஒன்றால் மூடப்படும்,அரைகுறையான மண் சுவருடனும்,கிழித்த கிடுகளாலும் வேயப்பட்டு காணப்படுகின்றன.
போர்க் காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இந்தப்பிரதேசத்தில்,கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றது.அதன் பின்னர் அந்தப் பகுதிகளில் மணல் அகழப்பட்டு ,பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.
அந்த மணல் மண்ணுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை காலங்களில் வீட்டுக்குள் வெள்ள நீர் வந்து சேரும்.அத்துடன் குறித்த இடத்தில நபர் ஒருவரின் இடுப்புக்கு மேலே வெள்ளம் செல்லும் அளவுக்கு மணல் அகழப்பட்டு உள்ளது.
வெள்ள இடர் காலத்தில் அரச அதிகாரிகள் வந்து செல்வதாகவும்,இதுவரை நிவாரண எதுவும் கிடைக்கவில்லை என்றும்,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


பிற செய்திகள்