
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் இருவரை அதிபர் வலுக்கட்டாயமாக பாடசாலையை விட்டு வெளியேற்றி உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்ற இரண்டு மாணவிகளுக்கு, விலகல் பத்திரத்தை வழங்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்.
அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், குறித்த இரண்டு மாணவிகளும் சகோதரங்கள். அவரின் மூன்றாவது சகோதரம் ஒருவரை அவர்களின் பெற்றோர் வேறு பாடசலைக்கு சேர்த்த காரணத்தால், இந்த இரண்டு மாணவிகளையும் வெளியேற்றியுள்ளார் என தெரியவருகிறது.
இது தொடர்பில் ஆசிரியர் சங்கமானது, வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு வழங்கியது. முறைப்பாட்டுக்கமைவாக விசாரணையும் இடம்பெற்றது.
ஆனால் இன்று வரை எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஆகவே வடக்கு மாகாண கல்வி அமைச்சு எவ்வளவு தூரம் செயற்படுகிறது என்பது புலப்படுகிறது.- என்றார்.
https://www.facebook.com/samugamweb/videos/408475961203277
பிற செய்திகள்