
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசியப்பிட்டியில் வயோதிப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
72 வயதுடைய குறித்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தீயிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மேலதிக விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்