
பதுளை பொது மருத்துவமனையிலும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உயிராபத்தில் உள்ளனர் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகை கிடைக்காத நிலையில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையும், அறுவை சிகிச்சைகள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு அவசியமில்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் தையல் நூல் மற்றும் எலும்பு முறிந்தால் பயன்படுத்தப்படும் பிளேட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏராளமான இதய நோயாளிகள், சுவாச நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், நாய் கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.