
மொனராகலை யாலபோவ- வெல்லவாயப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய தனமல்வில பகுதியை நோக்கி சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர் கலமொட ஆர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வெல்லவாய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவித்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.