ஊழல்வாதிகளாலும், இனவாதிகளாலுமே நாடு நாசமானது! – மஹ்தி

ஊழல்வாதிகளும் இனவாதிகளும் அரசியல் தலைமைகளாக தெரிவு செய்யப்பட்டமையே நாடு நாசமாக காரணமாகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று வழங்கிய ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அண்மைய அரசியல் தரவுகளின் படி இந்நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்தமைக்கு அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளும் இனவாதமுமே காரணமாகும் என தெளிவாக நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

ஐரோப்பாவின் நோயாளியாக வர்ணிக்கப்பட்ட துருக்கி உலக பொருளாதார தரவரிசையில் 16 ஆம் இடத்தை எட்டிப் பிடித்தது. ஊழல் மோசடிகள் இல்லாத அரசாங்கம் நடப்பதனாலே என அதன் அதிபர் அர்தூக்கான் கூறுகின்றார்.

நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது கட்சி, இனம், மதம், பணம், சலுகை போன்றவற்றிற்காக தகுதியே இல்லாதவர்களுக்கு வாக்களித்து அவர்களை தலைவர்களாக தெரிவு செய்தமை நாம் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும் என இன்று எம்மால் உணர முடிகின்றது.

எனவே எதிர்காலத்தில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் அரசியலுக்காக இன, மத வாதங்களை கையில் ஏந்துபவர்களையும் புறக்கணித்து வெளிப்படை தன்மையான ஊழலில்லாத அரசியல் தலைவர்களை தெரிவு செய்து நாட்டை பாதுகாக்க அனைவரும் தயாராக வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *