திருகோணமலை மாவட்ட மட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தை உள்ளடக்கிய அணியினர் கரப்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.
திருகோணமலை மக்கேய்சர் உள்ளக விளையாட்டரங்கில் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது.
இதில் சுமார் 08 பிரதேச செயலகங்களை சேர்ந்த அணியினர் பங்கு கொண்ட நிலையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தை உள்ளடக்கிய அணியினர் கரப்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்தை தனதாக்கினர்.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.டி.ஹாரிஸ் குறித்த அணியினருக்கு திறம்பட பயிற்சி அளித்து வந்தார்.
சுமார் 12 வருடங்களின் பின் ஆண், பெண் அணியினர் தம்பலகாமம் பிரதேசம் சார்பாக சம்பியனாக முடிசூடியமை குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் சம்பியனாக தெரிவாகியமைக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்