
கொழும்பு,ஜுன் 16
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
போட்டி இடைநிறுத்தப்படும் போது 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டி கண்டி பல்லேகட சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
முதலாவது ஒருநாள் போட்டியிலும் மழை குறுக்கிட்ட நிலையில் டக்வெல்த் லூயிஸ் முறைப்படி போட்டியை நடாத்த நடுவர்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.