தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக ரஜீவ் சூரிய ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் உப தலைவராக அவர் கடமையாற்றியிருந்தார்.
எவ்வாறாயினும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடந்த ஆண்டு ஒகஸ்ட் 10 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடந்த கடந்த முதலாம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு உயர் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்