ஜனாதிபதி கோட்டாவுக்கு பிறந்தநாள் கடிதம் அனுப்பிய சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷிஜின்பிங், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிறந்தநாள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலைக்கு எதிராக “சுதந்திரம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஆதரவு” ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனா இலங்கைக்கு தனது ஆதரவை வழங்க எப்போதும் தயாராக உள்ளது, 2022 சீனா இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. நாங்கள் 65 ஆண்டுகளாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஆதரவளித்து வருகிறோம்.

எமது உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு, அதனை புதிய உயரத்திற்கு உயர்த்த தொடர்ந்தும் பணியாற்றுவேன் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 73வது பிறந்தநாளை ஜூன் 20ஆம் திகதி கொண்டாடுகிறார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *